நாட்டில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்து வருகிறது – மத்திய சுற்றாடல் அதிகாரசபை

நாட்டில் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்து வருவதாகவும், குறிப்பிட்ட சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மட்டத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் அடிப்படையில், வடக்கு, வடமத்திய, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200-ஐத் தாண்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புணர்வுப் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய காற்று சுழற்சியின் ஊடாக நாட்டிற்குள் காற்று மாசுபடுத்திகள் உட்புகுந்தமையே இந்தக் காற்றின் தரக் குறைவிற்குப் பிரதான காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலவும் சீரற்ற வானிலையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பிட்ட சில பகுதிகளில் வெளிப்புறச் சூழலில் அவதானிக்கப்படும் பனிமூட்டம் போன்ற தோற்றத்திற்கு, வளிமண்டலத்தில் தங்கியுள்ள தூசி மற்றும் ஏனைய நுண் துகள்களே காரணம் என கலாநிதி குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

தற்போதுள்ள தரவுகளின்படி, இந்நிலைமை இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தொடர்ச்சியான வானிலை குழப்பங்கள் மற்றும் மாறிவரும் வளிமண்டலச் சுழற்சி முறைகள் காரணமாக இது குறித்த துல்லியமான எதிர்வுகூறல்களை வழங்குவது சவாலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்காலப்பகுதியில் பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காற்றில் பரவும் தூசித் துகள்களால் ஒவ்வாமை ஏற்படக்கூடியவர்கள் மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.

ஒவ்வாமை எதிர்வினைகள் அல்லது சுவாசிப்பதில் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலைமையானது காலை நேரங்களில் அதிகளவில் உணரப்படும் எனவும், அடுத்த சில நாட்களில் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கலாநிதி குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects