பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளடங்கலாக, மொத்த ஏற்றுமதிகள் நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 10.1பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இது 6.8 சதவீத வளர்ச்சி என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் ஏற்றுமதிகளை விட இறக்குமதிகளில் உயர்ந்தளவு வளர்ச்சியொன்றினை பதிவு செய்துள்ளது.
தனியார் மற்றும் வர்த்தக நோக்குடைய வாகனங்கள் ஆகிய இரண்டும் உள்ளடங்கலாக, வாகன இறக்குமதிகள் ஜூன் மாதத்தில் 163 மில்லியனாக அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதனால், நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த வாகன இறக்குமதிகள் 475 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது.
2025 ஜூன் மாதத்திலும் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியன பிரதான ஏற்றுமதி நாடுகளாகத் தொடர்ந்தும் காணப்படுகின்றன.
இதேவேளையில் சீனா, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன முதல் நிலையிலுள்ள இறக்குமதி நாடுகளாகவும் காணப்படுகின்றன.
சுற்றுலாத் துறை வருமானம் நடப்பாண்டின் முதல் ஆறுமாதங்களில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பீடு செய்யப்பட்டு, 10 சதவீதம் வளர்ச்சியினைப் பதிவுசெய்தது.
அதேபோன்று, வெளிநாட்டு தொழிலாளர் பணவனுப்பல்கள் நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் 18.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










