வாழும் கலை அமைப்பின் தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்த (14 ) மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வாழும் கலை அமைப்பின் தலைவர் கந்தவேல் அருள்நிதி தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டதுடன், விசேட அதிதியாக மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து வாழும்கலை அமைப்பின் வளர்ச்சிக்கு பங்காற்றிய பயிற்றுவிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலர் கௌரவிக்கப்பட்டதுடன் தலைமைத்துவப் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்கள் அதிதிகளால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










