ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியச் சேவைகள் திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிப்பு!

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியச் சேவைகளான ஐ-கிளவுட், ஆப் ஸ்டோர், ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் சப்போர்ட் ஆகியவற்றில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், பல நாடுகளில் உள்ள பயனாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதன்படி, ​அமெரிக்க நேரப்படி 17.11.2026 அன்று மதியம் 11:30 மணியளவில் (இலங்கை நேரப்படி இரவு 10:00 மணி) இந்தச் சேவைப் பாதிப்புகள் குறித்து ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன .

​ஆப்பிள் கணக்குகளில் உள்நுழைவது, கிளவுட் சேவைகளைப் பயன்படுத்துவது மற்றும் புதிய சாதனங்களைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் பயனாளர்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

மேலும், ஆப்பிள் வாலட், ஆப்பிள் மியூசிக் ஆகிய சேவைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டதாகப் பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, அமெரிக்கா மட்டுமின்றி பிரேசில், கிரீஸ் மற்றும் லாட்வியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயனாளர்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பதிவிட்டுள்ளனர்.

​பயனாளர்களிடம் இருந்து புகார்கள் குவிந்த போதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ‘சிஸ்டம் ஸ்டேட்டஸ்’ பக்கத்தில், இந்தச் சேவைகள் அனைத்தும் வழக்கம்போலச் செயல்படுவதாகவே காட்டப்பட்டது. இந்தத் திடீர் முடக்கம் குறித்து ஆப்பிள் நிறுவனம் தரப்பில் இருந்து உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

சேவைகள் எப்போது சீராகும் என்ற காலக்கெடுவும் அறிவிக்கப்படவில்லை.

​இதற்கிடையே, கூகுள் பயனாளர்கள் சிலரும் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜிமெயில், கூகுள் சர்ச் மற்றும் ஆப் ஸ்டோர் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

அக்கவுண்ட் உள்நுழைவது, மெசேஜ் அனுப்புவது, இ-மெயில் பயன்பாடு, ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிப் பரிமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டதாக பயனாளர்கள் தெரிவித்தனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects