மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் ஒருங்கினைப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டமானது மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜே.சஜிவ் தலைமையில் 30.07.2025 அன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டார்.

2025/ 2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் நிருவாக சபை உறுப்பினர்களுக்கான பொது வாக்கெடுப்பின் மூலம் புதிய தலைவராக லோஜிதன் தெரிவு செய்யப்பட்டார்.

இவ் உறுப்பினர்களினால் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான அபிவிருத்தி பணிகளும் சமூக சேவைகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், இளைஞர் அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர், மட்டக்களப்பு உதவி பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects