மத்திய மாகாணத்தில் சொடோகன் 2023 கராத்தே செம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கம்பளையைச் சேர்ந்த எஸ்.பி, சந்திரமோகன் சொடோகன் கராத்தே கழகத்தின் வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போட்டிகள் கண்டி திகனயிலுள்ள மத்திய மாகாண விளையாட்டுத் திணைக்கள அரங்கில் நடைப்பெற்றது.
இதில் பல்வேறு வயது பிரிவுகளை கொண்ட வீரர்கள் கலந்துகொண்டு இருந்தனர்.
கம்பளை வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.
கம்பளையை சேர்ந்த கராத்தே பயிற்றுவிப்பாளர் எஸ், பி.சந்திரமோகன் குழுவினர் இதில் தெரிவு செய்யப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇