சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கை!

இம்மாதத்தின் முதல் 15 நாட்களில் 102,469 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதன் மூலம் இந்த ஆண்டின் இதுவரை நாட்டுக்கு வருகை தந்த மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,964,773 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்மாதத்தின் முதல் 15 நாட்களில் மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 30% பங்களிப்புடன் 31,185 பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

9,772 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ரஷ்யா இரண்டாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.

6,898 சுற்றுலாப் பயணிகள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

ஜேர்மனி மற்றும் சீனா முறையே 6,574 மற்றும் 5,147 சுற்றுலாப் பயணிகளுடன் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 1,964,773 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இந்தியா 530,810 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 180,027 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

சீனாவிலிருந்து 128,887 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 111,879 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 100,030 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects