கோறளைப்பற்று மத்தியில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் 25 யுவதிகளுக்கு தையல் பயிற்சி ஆரம்பம்!

கோறளைப்பற்று மத்தி – வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அஸ்வெசும சந்தைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ், 25 யுவதிகளுக்கான தையல் பயிற்சித் திட்டம் மற்றும் பயிற்சி நிலையத் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இளைஞர், யுவதிகளுக்கு NVQ 4 மட்டத்திலான தொழிற்பயிற்சிகளை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் இப்பயிற்சி நிகழ்வு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக்கின் வழிகாட்டலில், பதில் உதவிப் பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாரூக் தலைமையில் புனாணை கிழக்கு, ரிதிதென்ன கிராமப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்டப் பொது முகாமையாளர் மைஷான், தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ. மஜீத், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம்.தாஹிர், ஜே.எம்.முனாஸ், திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர், NAITA பரிசோதகர், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரஜா சக்தி தலைவர் பீ.பவூர்தீன், CBO தலைவர்கள், மகாவலி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சித் திட்டத்தின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட 25 யுவதிகளுக்கும் தையல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் அவர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இளைஞர், யுவதிகளின் தொழில்திறன் விருத்தி மற்றும் பொருளாதார வலுவூட்டலை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects