மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் ஒளி விழா நிகழ்வு நிறுவனத்தின் தலைவர் து.தேவரதர்ஷன் தலைமையில் ( 26.12.2023 ) மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும் ஆசிர்வாத ஆராதனையினை தாண்டவன்வன்வெளி தேவாலயத்தைச் சேர்ந்த திருச்சிலுவை பணியாளரான அருட் சகோதரி பிரேமிலா அவர்கள் நடத்தினார்கள்.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் போஷகர் சே.செல்வராஜா, Diva Home Designer உரிமையாளர் திவாகரன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் பிரியகாந்த் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள், நுவரெலியா மாவட்ட செவிப்புலனற்றோருக்கான நிறுவனத்தின் தலைவர் ஜே.சதானந்தன், தாண்டவன்வெளி தேவாலயத்தைச் சேர்ந்த திருச்சிலுவை பணியாளரான வாமினி உதயநிதி எனப் பலரும் கலந்துகொண்டனர் .
நிகழ்வில் பாடசாலை செல்லும் செவிப்புலனற்றோர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இக் கற்றல் உபகரணங்களை நன்கொடையாக வர்த்தகர்கள் அரச/அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள் நலன் விரும்பிகள் ஆகியோர் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇