இலங்கையின் முதலாவது மின்சாரப் போக்குவரத்து மற்றும் பேட்டரி தொழில்நுட்ப மையம் திறந்து வைப்பு!

இலங்கையின் முதலாவது விரிவான தேசிய பேட்டரி பரிசோதனைச் சேவையாக, தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தில் (NERDC) நிறுவப்பட்டுள்ள ‘மின்சாரப் போக்குவரத்து மற்றும் பேட்டரி தொழில்நுட்ப மையம்’ (Centre for E-Mobility and Battery Technology) 23.11.2026 அன்று திறந்து வைக்கப்பட்டது.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தலைமையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விசேட ஆய்வக வசதியை நிறுவுவதற்கு சுமார் ரூ. 161.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இதில் அரசாங்கத்தின் ‘தேசிய தர உட்கட்டமைப்பை வலுப்படுத்தும்’ (NQI) திட்டத்தின் ஊடாக ரூ. 118 மில்லியனும், NERDC நிறுவனத்தின் நிதியிலிருந்து ரூ. 43.5 மில்லியனும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

பாரம்பரிய பேட்டரி மதிப்பீடுகளுக்கு அப்பால் சென்று, நவீன பேட்டரி தொழில்நுட்பங்கள் தொடர்பான பரிசோதனைத் திறன்களை நாட்டில் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தர உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், மின்சாரப் போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் முக்கிய மைல்கல்லாகவும் இது கருதப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்திகளை மேம்படுத்துதல், உள்நாட்டு பெறுமதி சேர்த்தலை அதிகரித்தல் மற்றும் விசேட பரிசோதனைச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் இந்த வசதியால் பயனடைய முடியும்.

பல்வேறு வகையான பேட்டரிகள் மற்றும் பேட்டரி கட்டமைப்புகளின் செயல்திறன், கொள்ளளவு, நீடித்துழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கான நவீன பரிசோதனை வசதிகள் இந்த மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வெவ்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் பேட்டரிகளின் செயல்திறனைப் பரிசோதித்தல் மற்றும் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற உபகரணங்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் டொக்டர் ரோஷணி திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், NERDC நிறுவனத்தின் தலைவர் டொக்டர் சித்ரால் அம்பவத்த, பதில் பணிப்பாளர் நாயகம் மனோஜ் கருணாரத்ன, பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கைத்தொழில் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects