கடந்த 2023 நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தி பெற்ற மட்டக்களப்பு வலய மாணவர்கள் 352 பேருக்கு கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் மட்டக்களப்பு புனித சிசில்யா தேசிய மகளில் கல்லூரியில் 28.12.2023 அன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு வலயக் கல்விப் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே. ஞானரெட்னம், கௌரவ அதிதியாக ஒய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் இரவிசந்திரா மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், ஆசிரியர் ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. ஜே.ஜே. முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
இதன்போது மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 3 கோட்டங்களிலுமுள்ள பாடசாலைகள் மூலமாக இப்பரீட்சைக்குத் தோற்றி வெற்றி பெற்ற 352 மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇