06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

நிலவும் சீரற்ற வானிலையுடன் 06 மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (25.11.2026) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (26) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் மண்சரிவு முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகள் பின்வருமாறு:

நிலை 02 – அவதானத்துடன் இருங்கள் (Amber)

கண்டி மாவட்டம்: உடுநுவர

கேகாலை மாவட்டம்: கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ

நிலை 01 – விழிப்புடன் இருங்கள் (Yellow)

களுத்துறை மாவட்டம்: புளத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர

கண்டி மாவட்டம்: தொலுவ, கங்க இஹல கோரளை, உடபளாத மற்றும் யட்டிநுவர

கேகாலை மாவட்டம்: அரநாயக்க, ருவான்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட

மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை

நுவரெலியா மாவட்டம்: நில்ந்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, அம்பகமுவ கோரளை, கொத்மலை கிழக்கு, தலவாக்கலை, நோர்வூட் மற்றும் வலப்பனை

இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல மற்றும் குருவிட்ட

குறித்த பகுதிகளிலுள்ள மலைச்சரிவுகளை அண்டி வசிக்கும் மக்கள் மண்சரிவு, சரிவுகள் இடிந்து விழுதல், கற்பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் ஆகியவை குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects