எரிபொருட்களின் விலைகளில் மற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இன்று 01.01.2024 அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அதன் புதிய விலை 366 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 358 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects