”வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை” எனும் தொனிப்பொருளில் 2024 ஆம் ஆண்டுக்கான பணிகளை ஆரம்பிக்கும் முதல் நாள் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் தலைமையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஒழுங்கமைப்பில் (01.01.2024) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
தேசியக்கொடியேற்றப்பட்டு, இராணுவ வீரர்கள் உட்பட தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து 02 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் சர்வமத தலைவர்களின் ஆசியுரையினை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரின் விசேட உரையும் இடம்பெற்றது.
இதன்போது அனைத்து உத்தியோகத்தர்களாலும் இவ்வாண்டிற்கான அரசசேவை உறுதியுரை மேற்கொள்ளப்பட்டதுடன் நிகழ்வின் நிறைவில் உத்தியோகத்தர்களிடையே புத்தாண்டு பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.
அதே வேளை மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள், சுகாதார திணைக்களம் சார்ந்த அலுவலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச வங்கிகள் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள் சார்ந்த அலுவலகங்களிலும் இந் நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇