‘வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்’ எனும் தொனிப்பொருளில் 2024 புதிய ஆங்கில புதுவருட தினத்தை சிறப்பிக்கும் வகையில், புதுவருட நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் தலைவர் எஸ்.ஜெயராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் கலந்து கொண்டதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் திருநாவுக்கரசு, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கரோ மன்ற மாவட்ட இணைப்பாளர் துரைராசா, அகிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் விநாயகமூர்த்தி விசயராஜா, கல்லடி ஹரி சிறுவர் இல்ல தலைவர் சந்திரகுமார் உட்பட வர்த்தக பிரமுகர்களும் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பானது, கிழக்குமாகாணத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், மாணவர்களின் கல்வி மேம்பாடு போன்ற அடிப்படை தேவைகளை அபிவிருத்தி செய்யும் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇