ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையில், ரோஷியா விமான சேவையும் இணைந்துள்ளது.
இதற்காக அந்த விமான சேவையின் போயிங் – 777 ரக விமானம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மொஸ்கோவுக்கும் – கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் இடையில் வாராந்தம் 4 தடவைகள் குறித்த விமானம் தமது சேவையை முன்னெடுக்கவுள்ளது.
நேற்று முன்தினம் முதல் ரஷ்யாவின் ரோஷியா விமான சேவைகள் இலங்கைக்கான தமது நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
முன்னதாக ரஷ்யாவின் எரோஃப்ளோட், அசூர் மற்றும் ரெட் விங்ஸ் ஆகிய விமான சேவைகள் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇