பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற 22ஆவது மூத்தோருக்கான ஆசிய தடகள செம்பியன்ஷிப்
போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் 06.01.2024 அன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான தடகளப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்த 72 வயதான அகிலத் திருநாயகி இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இவர் 1,500 மற்றும் 5000 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் 04 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇