வைத்தியர்களின் கொடுப்பனவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 09.01.2024 காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுத்துள்ளது.
இரசாயன ஆய்வாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க வல்லுநர்கள், உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
பாரபட்சமின்றி அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன், பணிப்புறக்கணிப்பை தொடர்வதா என்பது தொடர்பில் இன்று 09.01.2024 பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇