மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது, எனவே பிரதான கால்வாய்கள், ஆறுகள், மற்றும் தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கிரான் பி.செ பிரிவு (KPS) – புலிபாஞ்சகல் கோஸ்வே மற்றும் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு போக்குவரத்து பாதிப்பு – படகுசேவைகள் 02 மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுப்பு.
செங்கலடி பி.செ பிரிவு (EP) – ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி போக்குவரத்து பாதிப்பு – படகுசேவைகள் 02 மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுப்பு.
வாகரை (KPN) – ஆற்று வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேச போக்குவரத்து பாதிப்பு உழவு இயந்திர சேவை 01 மற்றும் படகுசேவை 01 மேற்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுப்பு.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு
மாவட்ட செயலகம்
மட்டக்களப்பு
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇