பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் குறுக்கே கல்லெல்ல பாலத்திற்கு அருகில் சுமார் ஒரு அடி நீர்மட்டம் காணப்படுவதாகவும், அதனை கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை கல்லெல்ல பகுதியிலிருந்து வீதி மூடப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மாணிக்க கங்கை நிரம்பி வழிவதால், யால பூங்காவின் திஸ்ஸமஹாராம, பலட்டுபான பிரதான நுழைவாயிலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 06 சுற்றுலா பங்களாக்களும் மூடப்பட்டுள்ளதாக பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇