அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தலில் 2 இலட்சத்திற்கும் மேலான பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி ஒரு அடைக்கப்பட்ட தண்ணீர் போத்தலில் 110,000 முதல் 400,000 நானோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாகவும் அதில் 240,000 விஷத் துகள்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த நானோ பிளாஸ்டிக் துகள்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், புற்றுநோயை உண்டாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நானோ பிளாஸ்டிக் துகள்கள் மிகவும் கரையக்கூடிய இரசாயன வகை என்றும், அவை மிக விரைவாக உடலுக்குள் நுழையும் திறன் கொண்டவை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇