மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதிஜே.ஜே.முரளிதரனுடன் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் மாவட்ட செயலகத்தில் (13.01.2024) அன்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இக் கலந்துரையாடலில் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பினர் மாவட்டத்தில் பருவப்பெயர்ச்சி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் உள்ள முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, தாரவெளி, அம்பேத்குடா போன்ற பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்கிவருகின்றமை தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாமாங்கராஜா இங்கு கருத்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் அனர்த்தங்கள் எற்படும் போது தமது சிவில் சமூக அமைப்பினுடாக தேவையான உதவிகளை வழங்குவதுடன் மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு தங்களது பங்களிப்பை எப்போதும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇