2024 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் அதேவேளை அதனை மாற்றியமைக்கும் வருடாந்த நிகழ்வாக இந்த கண்காட்சி இடம்பெறுகிறது.
இந்த கண்காட்சி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
‘வடக்கிற்கான உங்கள் நுழைவாயில்’ என்ற தொனிப்பொருளில் இந்த வர்த்தக கண்காட்சி இந்த முறை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇