இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கையை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மூலம் புதிய சுற்றுலாத் திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விடவும் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக இந்தியாவிலுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் குழுவொன்று கடந்த 17 ஆம் திகதி மும்பை மற்றும் டெல்லியிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இலங்கை முழுவதிலுமுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவிருப்பதுடன் இலங்கையின் உணவு முறைகள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளனர்.
இலங்கையை ஒரு சுற்றுலா தலமாக உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇