கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ். எச். எம். முஸம்மிலின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (17.01.2024) அன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் செய்யத் அலிசாஹிர் மௌலானா, உதவிப் பிரதேச செயலாளர் எம். ஏ. சி. ரமீஸா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச். எம். றுவைத், பிரதேச செயலக பிரிவில் செயற்படும் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் மீளாய்வுகள், இவ்வாண்டு அமுல்ப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் மீளாய்வுகள் , திணைக்களங்கள் ரீதியான சவால்கள், போதைப்பொருள் பாவனை மற்றும் குடிநீர் பிரச்சினை போன்றவை ஆராயப்பட்டன.
மேலும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇