அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபரின் புகைப்படத்தை டிஜிட்டல் வடிவில் நகல் எடுப்பதற்கு பதிவுக் கட்டணமானது 400 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அடையாள அட்டை அல்லது அதன் நகலைப் பெற, விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்லைன் மூலம் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் அல்லது பதிவு செய்யப்பட்ட ஸ்டூடியோ(studio) மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஆட்பதிவுத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும். அதுதவிர்ந்து, தனிநபரால் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇