ஐசிசியின் இருபதுக்கு 20 சகலதுறை வீரர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்துள்ளார்.
சகலதுறை வீரர்களுக்கான புள்ளிப் பட்டியலில் 222 புள்ளிகளைப் பெற்று ஹர்திக் பாண்டியா மற்றும் இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஆகியோர் சம நிலையில் உள்ளனர்.
எனினும் ஹர்திக் பாண்டியா தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நான்காவது இடத்தில் சிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசாவும், பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.
இதேவேளை, இருபதுக்கு 20 பந்துவீச்சாளர் தரவரிசையில் வனிந்து ஹசரங்க மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇