இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சேவையை ஆரம்பிக்க தேவையான ஆரம்ப கட்ட பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஏற்கனவே காங்கேசன்துறை துறைமுகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
40 வருட இடைவெளிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் பின்னர் அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 150 பயணிகள் இந்த கப்பல் சேவையின் ஊடாக பயணிக்க முடியும்.
இதேவேளை, இந்த வருட இறுதிக்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறையினை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் மற்றும் கொள்முதல் தொடர்பான பூர்வாங்க பணிகள் இடம்பெற்று வருவதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇