மேல், தெற்கு, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 22 முதல் டிசம்பர் 22 வரை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை முழுவதும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,322 ஆக அதிகரித்துள்ளதுடன் இந்த மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 1,839 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோயினால் இதுவரையில் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தீவிரமடையும்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇