நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று (26.01.2024) நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட பல நாடாளுமன்ற குழுக்கள் கலைக்கப்படும்.
புதிய கூட்டத் தொடரின் பின்னர், ஜனாதிபதியினால் அதற்கான உறுப்பினர் நியமனம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇