அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு (SPAND ) அமைப்பினால் அம்பாறை மாவட்டம் – புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் தேவைகளைக் கண்டறியும் பொருட்டு ஒரு ஆய்வு நிகழ்வு 23-01-2024 அன்று இடம்பெற்றது.
LIFT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சிறுவர்களின் தேவைகளை சிறுவர்களிடமிருந்து கண்டறிவதன் மூலம் முடிவுகள் எடுப்பதில் சிறுவர்களையும் உள்வாங்குதல் எனும் வேலைத்திட்டத்தின் ஓர் பங்காளி நிறுவனமாக SPAND அமைப்பு இவ் ஆய்வினை மேற்கொண்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ், அறநெறிப்பாட ஆசிரியர்கள், மாணவர்கள், LIFT நிறுவன உத்தியோகத்தர்கள், SPAND அமைப்பின் தலைவர் சுவோஜன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளை இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக LIFT நிறுவனத்தினால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட பரமபதம் விளையாட்டு விளையாடப்பட்டமை விசேட அம்சமாகும்.
அந்த ஆய்வில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட தேவைகளின் அடிப்படையில் இவ் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சில வேலைத்திட்டங்கள் SPAND அமைப்பினால் செயற்படுத்தப்படவுள்ளன. இதற்கான நிதி Unicef ஊடாக LIFT நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…