கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் இயங்கிவரும் செங்கலடி மற்றும் கரடியனாறு மாதர் அபிவிருத்திப் பயிற்சி நிலைய 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பிரதேச மட்ட கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் தலைமையில் செங்கலடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் 24.01.2024 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் கலந்து கொண்டதுடன் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், மற்றும் மாவட்ட சிரேஷ்ட தையல் போதனாசிரியை, இதன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கலந்துகொண்டிருந்தனர்.
இக் கண்காட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇