கோறளைப்பற்று மத்தி பிறைந்துறைச்சேனை 206சி கிராம சேவகர் பிரிவின் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஐந்தாவது வருடாந்த நிகழ்வு பிரிவு உத்தியோகத்தர் ஏ.சி.சாதிக்கீன் ஏற்பாட்டில் (30.01.2024) அன்று சாதுலியா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.பசீர் அவர்களும் ஏனைய அதிதிகளாக வங்கி முகாமையாளர் எஸ். ரவிச்ந்திரன், சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இர்பான், வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் ஏ.பி.காதர் முகம்மட், Rcbo தலைவர் எஸ்.ரீ.பைறூஸ் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்ச்சிகள், வறியவர்களுக்கான உலர் உணவு வழங்கள், பயிர்கன்றுகள் வழங்கள் கடந்தகால சமுர்த்தி சமுதாய அமைப்பு தலைவர்களுக்கும் புதிய தலைவர்களுக்கும் சின்னங்களும் வழங்கி கெளரவிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇