நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 ஆயிரத்து 250 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்மேடு சரிவு மற்றும் பலத்த காற்று என்பவற்றினால் யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, கம்பஹா, காலி, புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.