இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தொழிலுக்காக இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இஸ்ரேலில் கட்டுமானம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் பணிப்புரிந்து வருகின்றனர். 

இந் நிலையில், இஸ்ரேலில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறைவடையும் வரை இலங்கையர்களைத் தொழில்களுக்காக அனுப்ப வேண்டாம் என டெல் அவிஸில் உள்ள இலங்கை தூதரகம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணிக்கத்துக்குத் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, இலங்கையிலிருந்து நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு செல்வதற்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects