2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் புதிய வாகன பதிவுகள் 23.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, 2022ஆம் ஆண்டில் 19,218 வாகனங்களும், 2023 ஆம் ஆண்டில் 23,698 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் புதிய உந்துருளி பதிவுகளும் அதிகரித்துள்ளன.
2022ஆம் ஆண்டில் 8,363 ஆக இருந்த உந்துருளி பதிவுகள் கடந்த ஆண்டில் 16,869 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த வருடம் 636 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇