கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் பணிப்பின் பேரில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மிலின் ஆலோசனைக்கு அமைய சமூக பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்களின் முயற்சியின் பயனாக எம். ஜே.எப் சரிடேபிள் அமைப்பினால் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (17.01.2024) அன்று இடம்பெற்றது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் செய்யத் அலிசாஹிர் மௌலானா, உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஸா. பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம். றுவைத் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.நஜீம் என பலரும் கலந்து கொண்டு இவ்வுபகரணங்களை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇