கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் (01.02.2024) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வமின் தலைமையில் இடம்பெற்றது.

இக் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், ஏனைய திணைக்களத் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இக் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.

மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects