சுகாதார அமைச்சின் உத்தரவை அடுத்து, பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) ஒன்றியம், கல்வி அமைச்சுடன் இணைந்து, தொற்றாத நோய்கள் பாடசாலை மாணவர்களிடையே ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் அதிக அளவு கொழுப்பு, உப்பு மற்றும் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் அடங்கிய உணவுப் பொருட்களை விற்பனை செய்வது தடைசெய்யப்படுமெனவும், தனியார் மற்றும் அரச பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சோதனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை மீறும் சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.