கங்கண சூரிய கிரகணம் எனப்படும் முழு சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
குறித்த சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி நேற்றிரவு (08.04.2024) 9.13 அளவில் தோன்றியதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இந்த முழு சூரிய கிரகணத்தை வட அமெரிக்காவில் அதிகளவானோர் பார்வையிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
வட அமெரிக்கர்கள் இது போன்ற அரிதான முழு சூரிய கிரகணத்தை அவதானிக்கும் வாய்ப்பு எதிர்வரும் 2044 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇