வெங்காயம் பயிரிடுவதற்கு இலவச காப்புறுதி வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
நெல், மிளகாய், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, சோளம் மற்றும் சோயா ஆகிய 06 வகையான பயிர்களுக்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இலவச விவசாய காப்புறுதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
காட்டு யானைகளினால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் வறட்சி மற்றும் கடும் மழையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இந்த காப்புறுதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மேற்கூறியவற்றால் பயிர் சேதம் ஏற்பட்டால் அந்த விவசாயிகளுக்கு இலவச இழப்பீடு வழங்குவதற்காக பயிர்க் காப்புறுதிப் பயிர்களில் வெங்காய பயிர்ச்செய்கையையும் உள்ளடக்குமாறு விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபைக்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇