மட்டக்களப்பில் தேவை நாடும் மகளிர் அமைப்பினால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் துண்டு பிரசுரம் மற்றும் ஸ்டிக்கர்கள் விநியோகிக்க்கும் விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டம் 12.02.2024 அன்று மட்டக்களப்பு தேவை நாடும் மகளிர் அமைப்பின் நிலைய முகாமையாளர் சங்கீதா தர்மரஞ்சன் தலைமையில் மட்டு நகர் பகுதியில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொலிசார், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந் நிறுவனமானது பெண்கள் மற்றும் சிறார்களுக்கு வன்முறையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவதை நோக்காக கொண்டு மாவட்டத்தில் செயற்படுவதுடன் உளவியல் ஆலோசனை, சட்ட ஆலோசனை மற்றும் நீதிமன்ற பிரதிநிதித்துவம், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர தங்குமிட சேவைகள் போன்றவற்றை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇