மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்த நாள் நிகழ்வும் காந்தீயம் ஏடு வெளியீடும்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (02-10-2023) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் மற்றும் சமய சமூக பிரதிநிதிகள், இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி சேவா சங்க பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதி அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects