எரிபொருள் விலை மாதாந்தம் அதிகரித்து வருவதால் தற்போது தாங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை மாகாண பொதுப் பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என சங்கத்தின் தலைவர் ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
01.10.2023 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்கள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.