ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் இன்று (19) முதல் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் அமைச்சர் அலி சப்ரியுடன் வெளிவிவகார அமைச்சில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇