நாட்டிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் கடந்த வாரத்தில் அவற்றின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதங்களை (AWPR) கணிசமாகக் குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 25.35% ஆக இருந்த, உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் சராசரி எடையுள்ள முதன்மை கடன் வட்டி வீதம் (AWPR) தற்போது 11.61 ஆக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மக்கள் வங்கி கடந்த வாரத்தில் ஏனைய வணிக வங்கிகளை விட முதன்மை கடன் வட்டி வீதத்தை 10.87 ஆக குறைத்திருந்தது.
இது தவிர, ஹட்டன் நெஷனல் வங்கி (11.47%), கொமர்ஷல் வங்கி (11.59%), யூனியன் வங்கி (11.55%), ஃபேன் ஏசியா வங்கி (11.85%), நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி (11.74%), NDB வங்கி (11.94%) மற்றும் அமானா வங்கி (11.10%) ஆகியவை சராசரி முதன்மை கடன் வட்டி வீதத்தை 12%க்கும் குறைவாகப் பராமரித்த உள்நாட்டு வணிக வங்கிகளாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇