நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63% ஆக அதிகரிக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.
மின் தேவை அதிகரித்து வருவதால் நீர்த்தேக்கங்களில் நீர் நிலைகளை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇