நாட்டில் இம்மாதம் முதல் 25 நாட்களில் 121,595 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 757,379 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், இம்மாதம் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 18 சதவீதமானோர் இந்தியா நாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அதன்படி, 21,324 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், ரஷ்யாவிலிருந்து 12,807 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 11,626 சுற்றுலாப் பயணிகளும் ஜேர்மனியிலிருந்து 8,565 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇