நவம்பர் மாதத்திற்கான ரயில் பருவச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நவம்பர் மாதத்திற்கான ரயில் பருவச் சீட்டின் (Season Ticket) செல்லுபடியாகும் காலம் 07.12.2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பயணங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பயணச் சிரமங்கள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே ரயில் பருவச் சீட்டுகளை வாங்குவதாகக் கவனிக்கப்பட்டுள்ளது.

இச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 2025 நவம்பர் மாதத்திற்குச் செல்லுபடியான மாதாந்த மற்றும் மூன்று மாத காலப் பருவச் சீட்டுகளை 07.12.2025 வரை பயன்படுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

வாராந்த பருவச் சீட்டுகளுக்கு இது பொருந்தாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects