நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாக் கப்பல்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் 50 சுற்றுலாக்கப்பல்கள் நாட்டுக்கு வருகைத்தரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பல்கள் கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடப்படும் எனவும் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇